வேலூரில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அல்தாப்தாஸ் என்பவரிடம் செலுத்திய சீட்டு பணத்தை கேட்டுச் சென்றபோது, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.