சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெறும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. துறை ரீதியான அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும், புதிய திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அமைச்சரவை 5-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றிருக்க கூடிய நிலையில், இந்த அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.