Also Watch
Read this
Posted on: Sep 22, 2024 01:09 AM
By: Srini Vasan
திருச்சியில் பிரியாணி கடையை மறித்து நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
திருவானைக்காவல் பகுதியில் ரோந்து சென்ற ஸ்ரீரங்கம் போலீஸார், அழகிரிபுரம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் நடத்தி வரும் பிரியாணி கடையை மறைத்து போலீஸ் வாகனத்தை நிறுத்தினர்.
இதனால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் வாகனத்தை எடுக்குமாறும் விக்னேஷ் கூறியுள்ளார். ஆனால், போலீஸார் வாகனத்தை எடுக்காததால் ஆத்திரமடைந்த விக்னேஷ் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved