Also Watch
Read this
By: Web Team

மேற்கு மண்டல காவல் துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில், காவல் அதிகாரிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றனர்.
கோவை மாவட்டம், மதுக்கரை துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில், மண்டல அளவிலான உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கி (INSAS Rifle) பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெற்றது.
பிஸ்டல் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டி:
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் - முதலிடம்
மேற்கு மண்டல காவல் துறை தலைவர் செந்தில்குமார் - 2ஆம் இடம்
தமிழ்நாடு சீருடை காவல்துறை 4ஆம் அணி தளவாய் செந்தில்குமார் - 3ஆம் இடம்
இன்சாஸ் பிரிவு துப்பாக்கி சுடும் போட்டி:
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் - முதலிடம்
மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் - 2ஆம் இடம்
திருப்பூர், காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரஷ் அசோக் - 3ஆம் இடம்

கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டி:
பிஸ்டல் பிரிவு
முதலிடம் - கோவை நான்காம் அணி உதவி தளவாய் பூபதி
2ஆம் இடம் - உதவி ஆணையர் அஜய் தங்கம்
3ஆம் இடம் - கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன்
இன்சாஸ் பிரிவு
முதல் இடம் - கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன்
2ஆம் இடம் - கோவை 4ஆம் அணி தளவாய் பூபதி
3ஆம் இடம் - துணை காவல் கண்காணிப்பாளர் கோபால கிருஷ்ணன்
துப்பாக்கி சுடும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளுக்கு மேற்கு மண்டல காவல் துறை தலைவர், பரிசு கோப்பைகளை வழங்கி பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.