news-tamil-logo

3/21/2026, 8:19:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆட்சியில் பங்கு எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது
tv

Also Watch

tv

Read this

ஆட்சியில் பங்கு எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது

தூத்துக்குடி

Posted on: Feb 12, 2026 10:29 AM

20

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vaiko 1

தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஒரு சொல் கூட சொல்லியது கிடையாது

மேலும் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவர் உரிமை. ஆனால் மதிமுக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அவ்விதமான எவ்வித நிபந்தனையும் ஒரு சொல் கூட சொல்லியது கிடையாது என கூறினார்.


மறைந்த சீமைச்சாமி படத்திற்கு மலர் தூவி மரியாதை

கோவில்பட்டி வெங்கடேஷ் நகரில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நண்பர் சீமைச்சாமி என்பவர் சில தினங்களுக்கு முன்பு காலமானார். இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது வீட்டிற்கு சென்று, அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கணவரை மீட்கக்கோரி மனு அளித்த் நஸ்ரின் நிஷா

இதனைத் தொடர்ந்து, இலுப்பையூரணியை சேர்ந்த நஸ்ரின் நிஷா என்பவர், தனது கணவர் பாபு மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் காணவில்லை என்றும், அவரை தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை, அவரை பாதுகாப்பாக மீட்டு, இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தார். இதனைப் பெற்றுக் கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, உரிய நடவடிக்கை எடுக்க உதவுவதாக தெரிவித்தார்.


அமெரிக்காவிற்கு கொத்தடிமை...

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய இறையாண்மையை அடகு வைப்பது போல, அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு கொத்தடிமையாக ஆக்கி விட்டார் இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி. இந்த குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தின் மக்களவையில் பதிவு செய்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கூறிய குற்றச்சாட்டை நான் அப்படியே வழிமொழிகிறேன்.


பாஜகவை வேரடி மண்ணோடு வீழ்த்தவே கூட்டணி

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு மதிமுக என்ன முடிவு எடுத்ததோ, திராவிட இயக்கத்தை பாதுகாக்க, பாஜக பின்புல முயற்சியுடன் இந்துத்துவ, சனாதான சக்திகள் நுழைவதை வேரோடு, வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்கு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கருணாநிதி, அவர்கள் வளர்த்த சமூக நீதியை வளர்த்த தமிழ் நாட்டில் இந்துத்துவ சக்திகள் ஊடுருவ அனுமதிக்க கூடாது என்பதற்காகத்தான் திமுக உடன் மதிமுக கூட்டணி அமைத்தது.

மீண்டும் முதலமைச்சராக ஸ்டாலின் தான்...

கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். திராவிட மாடல் ஆட்சியை நடத்துகின்ற முதல்வர் ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக இந்த தேர்தலுக்கு பின்னரும் அவரே கொற்றம் அமைப்பார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.


ஆட்சியில் பங்கு மதிமுக கேட்கவில்லை

கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு கருத்தை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். ஆட்சியில் பங்கு வேண்டும், அதிக இடங்கள் வேண்டும் என்று கேட்பது அவரவர் உரிமை. ஆனால் மதிமுக கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் அவ்விதமான எவ்வித நிபந்தனையும் ஒரு சொல் கூட சொல்லியது கிடையாது. ஆனால் இந்துத்துவ சக்திகளின் கோர தாண்டவம் வந்தே மாதரம் பாடலை அரசியல் நிர்ணய சபையில், சில வரிகள் இங்கே இருக்கக்க கூடிய சிறுபான்மை மக்களின் நெஞ்சத்தை புண்ணாக்க கூடியது என்பதற்காக அதை அவர்கள் நீக்கினார்கள்.

ஒரு அக்கிரமமான சட்ட மசோதா நிறைவேற்றம்

இப்போது மொத்தமாக இருக்கக் கூடிய, பங்கீம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடலை முழுமையாக ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் அதை பாடிவிட்டு, தேசிய கீதம் பாட வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தில் ஒரு அக்கிரமமான சட்ட மசோதா ஒன்று இந்த பாஜக அரசு நிறைவேற்றி உள்ளது.

டெல்லிக்கு இந்திர பிரசாத் என வேறு பெயர்?

இது எச்சரிக்கை மணி, அடுத்து டெல்லிக்கு இந்திர பிரசாத் என்று வேறு பெயர் வைக்க வேண்டும், தலைநகரை வாரணாசிக்கு மாற்ற வேண்டும் என்றும் ஆர். எஸ். எஸ். இந்துத்துவ சக்திகளின் திட்டம் உள்நோக்கம் கொண்டது. படிப்படியாக திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் முயற்சிக்கிறார்கள். எல்லாரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன்...

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சீக்கியம் என்பது உள்பட பல தேசிய இனங்களை கொண்டதுதான் இந்தியா. பிரிட்டிஷ்காரர்களின் லத்தியும், துப்பாக்கியும் தான் இதை ஒரு நாடு என்ற நிலைக்கு கொண்டு வந்தது. எதிர்காலத்தில் இந்த ஒருமைப்பாடு உடைந்து நொறுங்குவதற்கு என்ன ஆபத்துக்களை ஏற்படுத்த முடியுமோ திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதன் அடையாளம் தான் இந்த வந்தே மாதரம் பாடல் சட்ட மசோதாவை அரங்கேற்றி உள்ளனர். இதற்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன்.


இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக போராடுவோம்

எங்கள் சக்தியை பயன்படுத்தி, நானும், எங்களுடைய இயக்கமும் இப்படிப்பட்ட முயற்சிகளை முறியடிப்பதற்கு எல்லா வகையிலும் போராடுவோம். எந்த மன்றத்திலும் வைகோவின் குரல் இந்துத்துவ சக்திகளுக்கு எதிரான முழக்கமாகத்தான் இருக்கும் என்பதையும், வரும் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை தொடரும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

வேங்கை சீறி எழுவது போல வீரநடை போடும்

அதன் வெற்றிக்கு எப்படி நான் ஒரு காலத்தில் முழு மூச்சாக பாடுபட்டேனோ, இப்போதும் அதே உணர்வுடன் இருப்பதால் தான் திருச்சியில் இருந்து மதுரை வரை 180 கிலோ மீட்டர், நாள்தோறும் லட்சக்கணக்கான மக்களை சந்தித்து, மதிமுக சேர்ந்துவிட வில்லை, அது முடங்காது, அது அடிப்பட்ட வேங்கை சீறி எழுவது போல நிமிர்ந்து எழுந்து வீரநடை போடும். என் தோழர்களும் அப்படித்தான் நிற்கிறார்கள்.

கனிமொழி எம்.பி., கூறியதை வழிமொழிகிறேன்

எங்களுடைய இயக்கம் திமுகவுக்கு ஈட்டி முனையாக, உறுதுணையாக, பக்க அரணாக செயல்படும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதால் பல திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என கனிமொழி எம்.பி., தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு, சகோதரி கனிமொழி கூறியதை நான் 100 க்கு 100 சதவீதம் வழிமொழிகிறேன்.

கற்பனை வாதங்களுக்கு எல்லாம் பதில் இல்லை

பாஜக - காங்கிரஸ் கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து கேட்டதற்கு, பலமாக சிரித்த வைகோ, தனிப்பெரும்பான்மை பெற்று திமுக ஆட்சி அமைக்கும்போது இந்த கோரிக்கைகள் எல்லாம் எடுபடாது, ஏற்கப்படாது, என்றார். தனி மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்கு சட்டசபை அமைந்தால் என்ற கேள்விக்கு, கற்பனை வாதங்களுக்கு எல்லாம் இந்த வைகோ பதில் சொல்ல மாட்டார் என்றார்.

               

Related Link
மூதாட்டிக்கு ரூ.200 கொடுத்த DSP

மூதாட்டிக்கு ரூ.200 கொடுத்த DSP



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

0
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved