Also Watch
Read this
நர்சிங் கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல்.. தலைமறைவாக இருந்த அரசு மருத்துவர் கைது
அரசு மருத்துவர் கைது
Updated: Sep 06, 2024 04:15 PM
பாலியல் புகாரில் தலைமறைவாக இருந்த வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த அரசு மருத்துவரை திருச்சியில் வைத்து போலீசார் கைது செய்தநர்.
தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு டிப்ளமோ படிக்கும் மாணவி, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் 2 மாத பயிற்சி மேற்கொண்டார்.
பயிற்சியை நிறைவு செய்ததற்கான சான்றிதழில் கையெழுத்து பெறுவதற்காக எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர் பாபுவை மாணவி அணுகியுள்ளார்.
அப்போது அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவி அளித்த புகாரின் பேரில், போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், திருச்சியில் பதுங்கியிருந்த மருத்துவர் பாபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved