விழுப்புரம் நகர் முழுவதும் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த இளைஞரை கைது செய்த போலீசார், 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர் புகாரின் பேரில் மர்மநபரை தேடி வந்த போலீசார், ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சென்னை வண்ணாரப்பேட்டைய சேர்ந்த பரூக் என்ற இளைஞரை கைது செய்தனர்.