சேலத்தில், திமுகவினர் 2 அணிகளாக பிரிந்து கிடப்பதால் வரும் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் கட்சித் தலைமை கலக்கத்தில் உள்ளதாக கூறப்படும் நிலையில், எந்த தொகுதியில் திரும்பினாலும் வெற்றி வாய்ப்பு தங்களுக்கு தான் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி இறங்கி வேலை செய்து வருகிறாராம். போட்டியில் உள்ள திமுகவே ஒரு விஷயம் இல்லையென்றால் அரசியல் களத்தில் நியூ என்ட்ரியான த.வெ.க.வை தண்ணீர் குடிக்க வைப்போம் என்று, அதிமுகவினர் கூறிவரும் நிலையில் வேட்பாளர் லிஸ்ட்டை வேகவேகமாக தயார் செய்து கொண்டிருக்கிறாராம் இபிஎஸ்.வீரபாண்டி ஆறுமுகத்திற்கு பிறகு... சேலத்தை பொறுத்தவரை ஒட்டுமொத்த நகரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் தான் திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவர். தற்போதைய சுற்றுலாத்துறை அமைச்சர் பனமரத்துப்பட்டி ராஜேந்திரனுக்கும், வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் ஆரம்பகாலத்தில் இருந்தே ஆகாது. வீரபாண்டி ஆறுமுகம் தலைமைக்கு நெருக்கமாக இருந்ததால், ராஜேந்திரனை வளரவிடாமல் தடுத்ததோடு கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவிடாமலும் சைலண்டாக முட்டுக்கட்டை போட்டதாக கூறப்பட்டது. ஆனாலும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ராஜேந்திரனுக்கு நெருக்கம் என்பதால் வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கு பிறகு சேலத்தில், ராஜேந்திரனின் கை ஓங்கியது. தொகுதியில் என்ன நடந்தாலும் தனது பார்வையை விட்டு அகலாதபடி ராஜேந்திரன் பார்த்துக்கொள்ள அவரது ஆதரவாளர்களுக்கே முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது. ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்கு பின்னர் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்காத கடுப்பில் இருந்த அவரது ஆதரவாளர்கள், ராஜேந்திரன் மீது கடும் அதிருப்பதியில் உள்ளதாக கூறப்படுகிறது.இரண்டாக பிரிந்து கிடப்பதால்...ஒரே கட்சியில் உள்ள முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும், இந்நாள் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு மறைமுக மோதல் வெடித்துக் கொண்டிருக்க, ராஜேந்திரனின் வலதுகரமாக பார்க்கப்பட்ட கன்னங்குறிச்சி குபேந்திரன் அண்மையில் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது அமைச்சருக்கு எதிராக வெளிப்படையாக செயல்பட தொடங்கியுள்ளார். அதே போன்று முன்னாள் சேலம் மாநகர செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகளை அமைச்சர் ராஜேந்திரன் பகைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஒரே கட்சியில் உள்ளவர்களே சேலத்தில் இரண்டாக பிரிந்து கிடப்பதால் வரும் தேர்தலை எதிர் கொள்வது பெரும் சவாலாகவே இருப்பதாக கூறப்படுகிறது.11 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் லிஸ்ட்ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியை மட்டுமே திமுகவால் வெல்ல முடிந்தது. இப்படி உட்கட்சி பூசலால் சேலத்தில் திமுகவின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், இதுதான் தனக்கான சான்ஸ் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கைக்குரிய ஒரு புதுமுக நபரை தேர்தலில் களமிறக்க திட்டமிட்டுள்ளாராம். அதேபோல், கடந்த முறை பாமகவினர் 2 இடங்களில் வெற்றி பெற்றனர். தற்போது அந்த 2 இடத்தில்கூட அதிமுகவிற்கு பெரும் சிக்கல் இருக்க வாய்ப்பில்லையாம். பாமகவே இரண்டாக பிளவுபட்டு இருப்பதால் அதிமுகவிற்கு அங்கும் சாதகம்தான். கூட்டணியில் இருக்கும் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர் தேர்தலில் நிற்க சில நேரம் மாம்பழ சின்னம் ஒரு தடையாக இருந்தால், இரட்டை இலை சின்னத்திலேயே நிற்க வைத்துவிடலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் இபிஎஸ். அதனால் தற்போதே 11 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் லிஸ்ட்டை ஆர்வமாக தயார் செய்து வைத்துவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.வெற்றிக்கனியை கொடுத்துவிடுமா?அதேபோல், அரசியல் களத்தில் நியூ என்ட்ரியான தமிழக வெற்றிக்கழகத்திலும் சேலத்தை பொருத்தமட்டில் தமிழன் பார்த்திபன் மட்டுமே முகம் தெரிந்த நபராக உள்ளார். அவருக்கு சேலம் தெற்கில் செல்வாக்கு அதிகம். விஜய் மக்கள் இயக்கமாக இருந்தபோது நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் இளைஞர் பட்டாளத்தை தன்னுடன் வைத்துள்ள தமிழன் பார்த்திபன், கடந்த சில நாட்களாக மக்களை சந்திப்பது, அவர்களின் குறைகளை கேட்டறிவது என பல சுற்றி சுழன்று பணியாற்றி வருகிறார். இவைகள் எல்லாம் அவருக்கு கணிசமான வாக்குகளை பெற்றுத்தரலாமே தவிர வெற்றிக்கனியை கொடுத்துவிடுமா என்பது மிகப்பெரிய கேள்வியே என்கின்றனர் அதிமுகவினர். மொத்தத்தில் சேலம் தங்களுக்கு சாதகம் தான் பாதகம் இல்லை என்ற நம்பிக்கையில் உள்ளார்களாம் அதிமுகவினர். ஆனால், அரசின் உதவி திட்டங்கள் குறிப்பாக, தற்போது வழங்கிய 5 ஆயிரம் உதவித்தொகை இதெல்லாம் தங்களுக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்களாம் அமைச்சர் தரப்பினர். நியூஸ் தமிழ் செய்திகளுக்காக செய்தியாளர் வினோத். Related Link அதிமுக Ex அமைச்சருடன் திமுக மா.செ., டீல்