திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஓசியில் மது தரவில்லை என்றால் கடையை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாக மிரட்டிய நபரின் வீடியோ வெளியாகியுள்ளது. கீழப்பாலம் பகுதியில் இயங்கிவரும் அரசு மதுபான கடைக்கு வந்த மது பிரியர் ஒருவர் தனக்கு இலவசமாக மது வேண்டும் என கடைக்காரரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.