கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் வைக்கப்பட்டுள்ள 'ரத்தன் டாடா'வின் முழு உருவ கேக் சிலை பொதுமக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. ஐஸ்வர்யாஸ் பேக்கரிஸ் பாரதி நகர் கிளையில் வைக்கப்பட்டுள்ள இந்த கேக் சிலை, 60 கிலோ சர்க்கரை மற்றும் 250 முட்டைகளைக் கொண்டு சுமார் 7 அடி உயரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.