news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மீண்டும் புதுச்சேரி முதல்வராகிறார் ரங்கசாமி
tv

Also Watch

tv

Read this

மீண்டும் புதுச்சேரி முதல்வராகிறார் ரங்கசாமி

கூட்டணித் தலைவராக ரங்கசாமி தேர்வு

18

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மீண்டும் புதுச்சேரி முதல்வராகிறார் ரங்கசாமி

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக ரங்​க​சாமி தேர்வு செய்​யப்​பட்​டு உள்ளார். ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்த நிலையில், வரும் 13ஆம் தேதி முதல்​வ​ராக என்.ரங்கசாமி பதவி​யேற்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுச்சேரியில் ரங்கசாமி
புதுச்​சேரி சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி 18 தொகு​தி​களில் வெற்றி பெற்​றது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் இடம் ​பெற்​றுள்ள ரங்கசாமியின்

என்​ஆர்​.​காங்​கிரஸ் 12

பாஜக 4

அதி​முக, லஜக தலா ஒரு இடத்​தில் வெற்றி பெற்​றுள்​ளன.

பெரும்பான்மையுடன் ரங்கசாமி
புதுச்​சேரி​யில் உள்ள 30 எம்​எல்​ஏக்​களில் ஆட்சி அமைக்க 16 பேர் ஆதரவு தேவை. தற்போது தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 18 எம்​எல்​ஏக்​கள் பலம் உள்​ள​தால் மீண்​டும் ரங்​க​சாமி தலை​மை​யில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி அமைய உள்​ளது. ஏற்​கனவே கடந்த 3 நாட்​களுக்கு முன் என்​ஆர்​.​காங். கட்​சி​யின் சட்​டப்​பேரவை கட்​சித்​தலை​வ​ராக ரங்​க​சாமி தேர்வு செய்​யப்​பட்​டார். அதே போல் பாஜக​வின் சட்​டப்​பேர​வைக் கட்​சித்​ தலை​வ​ராக நமச்​சி​வா​யம் தேர்வு செய்​யப்​பட்​டார்.

என்.ரங்கசாமி தேர்வு
என்​டிஏ கூட்​டணி அமைச்​சர​வை​யில் பாஜகவுக்கு எத்​தனை அமைச்​சர்​கள் என்ற முதல்​கட்ட பேச்​சு​வார்த்தை நடந்​தது. இதில் எந்த முடி​வும் எட்​ட​ப்படவில்​லை. ​தொடர்ந்​து, புதிய ஆட்சி அமைய முதல்​வர் பதவியை ரங்​க​சாமி ராஜி​னாமா செய்​து, துணை நிலை ஆளுநர் கைலாஷ்​நாதனிடம் கடிதம் அளித்துள்ளார். ​தொடர்ந்து நடந்த ஆலோ​சனைக் கூட்​டத்​தில், பா.ஜ.க மேலிடப் பொறுப்​பாளர் மன்​சுக் மாண்​ட​வி​யா, ரங்​க​சாமி, பேர​வை​யின் பாஜக தலை​வர் நமச்​சி​வா​யம், அதி​முக மாநிலச் செய​லா​ளர் அன்​பழகன், லட்​சிய ஜனநாயக கட்​சித் தலை​வர் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் மற்​றும் என்​டிஏ கூட்​டணி எம்​எல்​ஏக்​கள் பங்​கேற்​றனர்.

கூட்டணித் தலைவராக ரங்கசாமி தேர்வு
இதில் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யின் தலை​வ​ராக ரங்​க​சாமி ஒரு​மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டார். ரங்​க​சாமி ஆட்சி அமைக்க பாஜக, அதி​முக, லஜக கட்​சிகள் ஆதர​வுக் கடிதங்​களை வழங்​கின. வரும் 13ஆம் தேதி ஆளுநர் மாளி​கை​யில் நடை​பெறும் எளிய விழா​வில் முதல்​வர் ரங்​க​சாமி பதவி​யேற்க முடிவு எடுத்​து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Related Link
மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி, முதலமைச்சரானார் சுவேந்து அதிகாரி

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி, முதலமைச்சரானார் சுவேந்து அதிகாரி

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் முன்னேறியது எந்த அணி?

8
47 mins agoshare
ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியலில் முன்னேறியது எந்த அணி?








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved