திருப்பத்தூர் அருகே அரசு பள்ளி 2-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிற்பியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். வெங்காளபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோயில் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த முனிரத்தனம், கோயிலுக்கு வந்து சென்ற பள்ளி சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக போலீஸில் புகார் செய்யப்பட்டது.