சின்னமனூர் அருகே, பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயிலில், மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இன்று காலை கடம் புறப்பாடாகி, கும்ப கலசத்தின் மீது ஆச்சாரியர்களால் தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் மீது கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது. பத்ரகாளி அம்மனுக்கு, சிறப்பு அலங்கார பூஜை, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.