திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காந்திநகரில் செயல்படும் அரசு நகராட்சி மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று நாட்களாக இரவில் பெய்த மழை காரணமாக தேங்கியுள்ள மழைநீரை அகற்றும்படி பலமுறை தகவல் அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டினர். பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.