திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே பஞ்சம்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மைதானத்தில் இந்து கோவில் திருவிழாவுக்கு அன்னதானம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அதே சமூகத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து கோவிலில் திங்கட்கிழமை நடைபெறும் கும்பாபிஷேகத்தை ஒட்டி மைதானத்தில் அன்னதானம் வழங்க அனுமதி கோரப்பட்டது. வட்டாட்சியர் அனுமதி மறுத்ததால் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மைதானத்தில் அன்னதானம் வழங்க அனுமதி அளித்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்தவ மக்கள் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூர் வட்டாட்சியர், ஏடிஎஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.