அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி, சியாத்தமங்கையில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், உணவு துறை அமைச்சர் சக்கரபாணி இன்று, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவு, தரம் மற்றும் எடை குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், நெல் மணிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.நெல் மூட்டைகள் அதிகமாக வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இரண்டு இயந்திரங்களைக் கொண்டு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.