Also Watch
Read this
By: Web Team

மேட்டூர் அணையிலிருந்து நீர்திறக்கப்படவுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவில் உள்ள வெண்ணாறில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி கிடப்பதால் நீர் வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர் தாலுகா பழையனூர், வடபாதிமங்கலம், உச்சிவாடி, அரிச்சந்திரபுரம், திட்டச்சேரி, புள்ளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெண்ணாறில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டி கிடப்பதால் நீர் வந்து சேர்வதில் சிக்கல் ஏற்பட்டு குறுவை சாகுபடி விவசாயம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டுமென பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.