செந்தில் பாலாஜியை போலவே அமைச்சர் கே.என்.நேருவும் அமலாக்கத் துறையிடம் மாட்டிக் கொண்டதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட மூலக்கொத்தளம் பகுதியில் அதிமுகவின் 54ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய ஜெயக்குமார், திமுக ஆட்சியில் உள்ளாட்சி பொறுப்பில் இருப்பவர்கள் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் லஞ்ச லாவண்யத்தில் திளைத்து வருவதாக விமர்சித்தார்.