ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்து 90 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. காலையில் ரூ.1,800 குறைந்த நிலையில், பிற்பகலில் 1,600 ரூபாய் அதிகரித்துள்ளது. காலையில் தங்கத்தின் விலை:சென்னையில் இன்று காலை அக்.30ஆம் தேதி, ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை, சற்றே குறைந்தது.கடந்த மாத தொடக்கத்தில் இருந்தே, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பெரும்பாலான நாட்களில் உயர்ந்தே வந்தது. அக்.17ஆம் தேதி ரூ.97,600 ஆக விலை உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. ஓரிரு நாட்களில், ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென விலை குறைந்து, ரூ.96,000க்கு விற்கப்பட்டது. இதன்பிறகு, ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இதற்கிடையில், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை குறைத்ததால், தங்கம் விலை இறங்கியது.இந்நிலையில் நேற்று, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,210க்கும், ஒரு சவரன் ரூ.89,680க்கும் விற்பனை ஆனது.இன்று காலை, ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,100க்கும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து, ஒரு சவரன் ரூ.88,800க்கும் விற்பனை ஆனது. இன்று, வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலை ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.165க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,65,000க்கும் விற்பனையாகி வருகிறது.பிற்பகலில் உயர்ந்த தங்கம்... இந்த நிலையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்து 90 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. காலையில் ஆயிரத்து 800 குறைந்த நிலையில், பிற்பகலில் ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து உள்ளது. இதையும் பாருங்கள் - தங்கம் விலையில் தடாலடி மாற்றம் | Gold Rate | Gold Rate Today | Gold Price