Also Watch
Read this
Posted on: Feb 23, 2026 07:55 AM
By: Manigandan Raja
உறுதிமொழியுடன்
வேலூரில் நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியை உறுதிமொழியுடன் தொடங்கிய விஜய்
எங்கள் ஓட்டு, எங்கள் உரிமை, எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது என தொண்டர்களுடன் உறுதிமொழியேற்பு
குட்டிக்கதை
வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் குட்டிக்கதையில் இருந்து தனது பேச்சை தொடங்கிய தவெக தலைவர் விஜய்
ஜல்லிக்கட்டு காளை Vs தவெக
முரட்டு ஜல்லிக்கட்டு காளை தான் தமிழ்நாட்டின் அரசியல்களம். ஜல்லிக்கட்டு காளையை தில்லாக அடக்கும் சிறிய பையன்தான் தவெக
வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு காளையுடன் தவெகவை ஒப்பிட்டு குட்டிக் கதை சொன்ன விஜய்
புரிய வேண்டியவர்களுக்கு புரியும்
மக்களை நேசிக்கும் தலைமை இல்லாததால் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்துள்ளனர். ஏமாற்றத்தை முறியடிக்க வெகு ஜன மக்கள் இயக்கமாக வந்ததுதான் தவெக. நான் சொன்ன ஜல்லிக்கட்டு காளை கதை புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
எனக்கும், அவருக்கும் தான் போர்
தற்போது நடைபெறும் தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக நடக்கும் போர்
விஜய், ஸ்டாலின் சார் இடையே நடக்கும் போர் தான் இந்த தேர்தல், இதுக்கு நடுவில் NDA, டெல்லி என எதுவும் இல்லை
நேரடியாக வருவேன்
ஒவ்வொரு வீட்டில் உயிராய் உணர்வாய் இருக்கும் நான் எல்லாரையும் உங்கள் இடத்திற்கே வந்து சந்திக்க ஆசைப்படுகிறேன்
தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நான் நேரடியாக வந்து உங்கள் எல்லாரையும் சந்திப்பேன்
வேலூரில் நடந்த தவெக கூட்டத்தில் விஜய் வாக்குறுதி
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved