Also Watch
Read this
தவெக ஆட்சிக்கு வந்தால் லஞ்சமின்றி அரசின் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சென்றுசேர தனி அடையாள அட்டை வழங்கப்படும், ஆதார் கார்டு போல தமிழ்நாடு குடிமகன் உரிமை அட்டை வழங்கப்படும் என்றும் கன்னியாகுமரி தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
விஜய் வாக்குறுதி
இடைத்தரகர், லஞ்சம் இல்லாமல் சேவை வழங்க தமிழ்நாடு சேவை உரிமை சட்டம், வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப் உருவாக்கப்படும் என்றும் விஜய் வாக்குறுதி அளித்தார். டிரைவிங் லைசென்ஸ், ரேசன் கார்டு, பிறப்பு சான்றிதழ் வழங்குவதில் தாமதம் செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

மாநில வளர்ச்சிக்கு புதிய இணையதளம்
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் நிதி எங்கே செல்கிறது? என தெரியாமல் சிதம்பர ரகசியம் போல ஸ்டாலின் சார் ரகசியம் போல இருப்பதாக விஜய் விமர்சனம் செய்தார். தவெக ஆட்சிக்கு வந்ததும் நிதிநிலை அறிக்கை செலவினங்களை மக்கள் கண்காணிக்க, மை வெற்றி தமிழ்நாடு டாட் இன் என்ற இணையதளம் உருவாக்கப்படும் என்றும் விஜய் வாக்குறுதி அளித்தார்.
தமிழ்நாட்டில் AI CITY
தவெக ஆட்சி அமைந்த 6 மாதங்களுக்குள் தமிழ்நாடு சேவை உரிமை திட்டம் உருவாக்கப்படும், தமிழக அரசின் சேவைகள் தாமதமானால் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும், சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு நாள் முழுவதும் மக்களின் மனுக்களுக்காகவே ஒதுக்கப்படும், தமிழ்நாட்டில் முதல்முறையாக AI CITY அமைக்கப்படும் என்றும், தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
