news-tamil-logo

3/18/2026, 11:54:10 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் தரிசனம்
tv

Also Watch

tv

Read this

இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் தரிசனம்

கோவை

Posted on: Feb 15, 2026 08:35 AM

35

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
isro main(1)

மேட்டுப்பாளையம் அடுத்த ஓன்னிப்பாளையத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற எல்லை கருப்பராயர் கோயிலில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (ISRO) முன்னாள் தலைவர் ஏ.எஸ். கிரண் குமார் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.


மகா சிவராத்திரி விழா கோலாகலம்

ஓன்னிப்பாளையம் எல்லை கருப்பராயர் கோவில் வளாகத்தில் கருப்பராயர், சிவன் மற்றும் சித்தர் பீடம் உள்ளிட்ட சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா மிகவும் விமர்சையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்


இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார் தரிசனம்

அந்த வகையில சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோயிலுக்கு வருகை தந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கிரண் குமார், எல்லை கருப்பராயர் மற்றும் சிவன் சன்னதிகளில் சிறப்புப் பூஜைகள் செய்து வழிபட்டார்.


கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு

அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, சித்தர் பீடத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளிலும் அவர் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர்கள் உடனிருந்தனர். சிவராத்திரி விழாவையொட்டி மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர்.

Related Link
புனித லூர்து அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா

புனித லூர்து அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 6 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved