Also Watch
Read this
By: Pari karthick

வாலத்தீவு அருகே கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர்.திருப்புல்லாணியை அடுத்த களிமண் குண்டு கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் நாட்டு படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது காற்றின் வேகம் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு படகு கடலில் கவிழ்ந்தாக கூறப்படுகிறது.