news-tamil-logo

3/18/2026, 11:54:20 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மீண்டும் காட்பாடியில் துரைமுருகன்
tv

Also Watch

tv

Read this

மீண்டும் காட்பாடியில் துரைமுருகன்

காட்பாடி வாக்காளப் பெருமக்களே... தேர்தல் 2026

Posted on: Feb 19, 2026 11:09 AM

25

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வயது மூப்பு காரணமாக, வருகிற தேர்தலில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு ஓய்வுகொடுக்க இருப்பதாக பேசப்பட்டாலும், காட்பாடி தொகுதி தனக்கு தான் என்று, அவர் கறார் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இத்தொகுதியில் அதிமுகவும் களப்பணியில் தீவிரம் காட்டி வருவதால், போட்டி கடுமையாகியுள்ளது.

* வட தமிழகத்தில் முக்கியமான தொகுதி காட்பாடி
* நட்சத்திர தொகுதியான காட்பாடியில் கடும் போட்டி
* 8 முறை காட்பாடி தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.


வட தமிழ்நாட்டின் முக்கியமான தொகுதியான காட்பாடியில் விவசாயம் தான் முக்கிய தொழிலாக இருக்கிறது. நட்சத்திர தொகுதியான காட்பாடியில் வருகிற தேர்தலிலும் கடும் போட்டி இருக்கும் என கணிக்கப்படுகிறது. 8 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தாலும், திமுகவின் முக்கிய நபராக, தலைமைக்கு மிக நெருக்கமானவராக இருந்தாலும் தொகுதி மக்களுக்கு பெரிய அளவில் திட்டங்களை அமைச்சர் துரைமுருகன் Durai Murugan கொண்டு வரவில்லை என்ற விமர்சனம் முன் வைக்கப்படுகிறது.

* பெரிய அளவில் திட்டங்களை கொண்டு வரவில்லை என விமர்சனம்
* ஊழல் புகார்கள் காரணமாக தொகுதி மக்கள் அதிருப்தி
* காட்பாடி தொகுதி பக்கம் எட்டிக் கூட பார்க்காதவர்


இதுபோக, அமைச்சர் துரைமுருகன் மீதான ஊழல் புகார்களும் தொகுதி மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த நல்ல அபிப்ராயத்தை கெடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது. மணல் கொள்ளை புகாரில் சிக்கியது, அமலாக்கத்துறை ரெய்டில் மாட்டியது மாதிரியான புகார்களை தொகுதி மக்கள் ரசிக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேலும், தொகுதி பக்கம் எட்டிக் கூட பார்க்காத துரைமுருகன், தேர்தலுக்கு மட்டும் தலை காட்டுவதும் மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாக பார்க்கப்படுகிறது. கட்சியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் துரைமுருகன் களத்தில் மக்கள் எளிதில் அணுகும் விதத்தில் இருக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது. இதன் விளைவாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில் தான் துரைமுருகன் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே துரைமுருகனும் அதிமுக வேட்பாளர் வி.ராமுவும் சரிக்கு சமமாக இருந்தனர். கடைசியில் தான் நிலவரமே மாறியது.

* 2021 காட்பாடி Katpadi  வெறும் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
* அதிமுக காட்பாடியில் தீவிர களப்பணி
* அதிமுகவுக்கு சாதகமான சூழல்


இந்த நிலையில், வருகிற தேர்தலில் அதிமுக காட்பாடியில் தீவிரமாக களப்பணி செய்து வருவதால், அவர்களுக்கு சாதகமான தொகுதியாகவே காட்பாடி திகழ்கிறது. கடந்த முறை வி.ராமு 84 ஆயிரத்து 394 வாக்குகள் பெற்றார். காட்பாடி தொகுதி அதிமுகவுக்கு சாதகமான தொகுதியாக நிலவுவதற்கு முக்கிய காரணம் சமுதாய வாக்குகள் தான். தொகுதியில் நடைபெறும் சுப, துக்க நிகழ்வுகளுக்கு நேரடியாக சென்று தனது இருப்பை வலுவாக பதிவு செய்துள்ளார் அதிமுகவின் வி.ராமு. காட்பாடி தொகுதியில் வன்னியர்கள், நாயுடு, முதலியார், பட்டியலினத்தவர்கள் கணிசமாக வசிக்கின்றனர். தொகுதியில் பெரும்பான்மையாக வன்னியர்கள் தான் இருக்கிறார்கள் என்பதால் துரைமுருகனுக்கு என தனி வாக்கு வங்கி இருக்கிறது. இதுபோக, காட்பாடியில் ஆந்திரா, தமிழகம் எல்லையில் வசிக்கும் தெலுங்கு பேசக் கூடிய நாயுடு சமூகத்தினர் இருப்பதாலும் அதிமுகவின் வி.ராமுவுக்கும் ஆதரவு இருக்கிறது.

* துரைமுருகன் போட்டியிடுவது உறுதி
* த.வெ.க.வில் நிலை என்ன?
* LKMP வாசு என்பவர் போட்டியிட வாய்ப்பு

இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக துரைமுருகன் போட்டியிட வாய்ப்பு இல்லை என சொல்லப்பட்ட நிலையில், என்ன ஆனாலும் காட்பாடி தனக்கு தான் என கடந்த வாரம் நிகழ்ந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார் துரைமுருகன். இதன் மூலம் மீண்டும் துரைமுருகன் போட்டியிடுவது உறுதி ஆகியிருக்கிறது. காட்பாடி திமுகவில் துரைமுருகனை தவிர அடையாளம் சொல்லக் கூடிய அளவுக்கு வேறு தலைவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த LKMP வாசு
* துரைமுருகன் தவிர்த்து யார் போட்டியிட்டாலும் கஷ்டம்
* காட்பாடி தொகுதி யாருக்கு?


இப்படி, அதிமுக, திமுகவில் இருந்து ஜாம்பவான்கள் போட்டியிடும் காட்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் LKMP வாசு என்பவர் போட்டியிட வாய்ப்பு என கருதப்படுகிறது. அதிமுகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த LKMP வாசு, சொந்த கட்சிக்காரர்களுக்கே பரிச்சயம் இல்லாத முகமாக தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தவிர்த்து திமுகவில் வேறு யார் போட்டியிட்டாலும் மண்ணை கவ்வும் எனக் கூறும் அரசியல் வல்லுநர்கள், அப்படி ஒரு முடிவை அறிவாலய தலைமை எடுத்தால் அதிமுகவின் வெற்றிக்கு
தானாக வழி கொடுக்க நேரிடும் எனவும் சொல்கிறார்கள்.


Related Link
வேட்பாளர் ரேஸில் 3 பேர், முந்தும் முன்னாள் அமைச்சர்

வேட்பாளர் ரேஸில் 3 பேர், முந்தும் முன்னாள் அமைச்சர்

              


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 6 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved