ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வரத்து குறைந்ததால் ஒரு வாழைத்தார் 400 ரூபாய் முதல் 980 ரூபாய் வரை ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒரு செவ்வாழை தார் 980 ரூபாய்க்கும், தேன்வாழை, பூவன், ரஸ்தாளி தார்கள் 400 ரூபாய் முதல் 510 ரூபாய் வரை ஏலம் போனது.