ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு பிரிவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மருதங்கநல்லூர் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் படம் பதிக்கப்பட்ட கொடியை அவமதித்ததாகவும், இதனால் இரண்டு சமூகத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது.