Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்த விரக்தியில் மகன்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் குறிஞ்சி நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த நரேந்திர பூபதி என்பவர் பலரிடம் கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் விரக்தியில் இருந்த அவர், தனது மனைவி சொந்த ஊருக்கு சென்றிருந்த வேளையில் இரு மகன்களை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.