Also Watch
Read this
Posted on: Feb 20, 2026 10:58 AM
By: Manigandan Raja

சடலம் மீட்பு :
கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையம் பகுதியில் எரிந்த நிலையில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் உடலை துடியலூர் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக
கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி அருகில் இச்சம்பவம் நடந்து உள்ளாதால்
அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கோவை, துடியலூரை அடுத்த வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி அருகே உள்ள ஒரு காலி இடத்தில் நேற்று மதியம் எரிந்த நிலையில் ஒரு பெண்ணில் உடல்
கிடப்பதாக துடியலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துடியலூர் போலீசார் அடையாளம் தெரியாத நிலையில் எரிந்து இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து துடியலூர் போலீசார் கூறும்போது எரிந்து கிடந்த பெண்ணிற்கு சுமார் 25 வயது இருக்கலாம் எனவும், அவர் சிவப்பு கலர் உடை அணிந்து உள்ளார். இது கொலையா?
அல்லது தற்கொலையா ? என விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
பொறியியல் கல்லூரி அருகே எரிந்த நிலையில் பெண்ணில் உடல் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved