news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அறுவடைக்குத் தயாரான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
tv

Also Watch

tv

Read this

அறுவடைக்குத் தயாரான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

அறந்தாங்கி, புதுக்கோட்டை

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
PDK

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில் ஆகிய தாலுக்காக்களில் சுமார் 60 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட
விளை நிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர்.

கடந்த ஆண்டுகளை போல் அல்லாமல் இந்தாண்டு உரிய நேரத்தில் பருவமழை தொடங்கி அவ்வப்போது சிறு சிறு மழையாக பெய்தது. இதன் மூலம் கிடைத்த நீரை விவசாயிகள் நீர் நிலைகளில் சேமித்து வைத்து விவசாயம் செய்தனர்.

அவ்வாறு காப்பாற்றப்பட்டு வந்த நெற்பயிர்கள் நல்முறையில் விளைந்து அறுவடைக்கு தயாரானது. இன்னும் இரண்டொரு நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் கடந்த 2 தினங்களாக பெய்த தொடர் மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.

இது குறித்து சிங்கவனம் பகுதி விவசாயிகள் தெரிவிக்கையில் விவசாயிகள் நாங்கள் ஆண்டு தோறும் அல்லல்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம், நகைகளை வைத்தும், விவசாயக் கடன்கள் வாங்கியும் ஏக்கர் ஒன்றிற்கு 40 ஆயிரம் வரை செலவு செய்து விவசாயம் செய்தோம்.

இந்தாண்டு போதிய மழை இல்லாவிட்டாலும் கிடைத்த தண்ணீரை கொண்டும், வெளியிலிருந்து வாங்கியும் விவசாயம் செய்திருந்தோம். முழு விளைச்சல் இல்லாவிட்டாலும் விளைந்த
நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தற்போது பெய்து வருகிற தொடர் மழையால் நெற்கதிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமாகிவிட்டது.

எனவே விவசாயிகளின் துயர நிலையை அரசு அறிந்து பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் என
கேட்டுக் கொண்டனர்.

இதையும் படியுங்கள் : துணிக்கடைக்குள் கஞ்சா போதையில் புகுந்த நபர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார் இரவு சாலை மறியலில்

0
6 hrs 11 mins agoshare
திருவொற்றியூர் தொடர் மின்வெட்டு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved