செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்படுள்ள நிலையில் மத்திய குழு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட கீரப்பாக்கம் மற்றும் ஒரகடம் பகுதிகளில் அமைந்துள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள நெல் குவியல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது நெல் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்று நெற் பயிர்களின் தரத்தினை எந்திரத்தின் மூலம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து படாளம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.