news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிறுவாபுரி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்
tv

Also Watch

tv

Read this

சிறுவாபுரி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

சிறுவாபுரி, திருவள்ளூர்

41

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Siruvapuri murgan

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி  திருக்கோவில் அமைந்துள்ளது. தொடர்ச்சியாக 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம்  ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் சிறுவாபுரி கோவிலில் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். தை மாத முதல் செவ்வாய்க்கிழமையான இன்று சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் இங்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பொது தரிசனம், 50 ரூபாய், 100 ரூபாய் கட்டண தரிசனம் என அனைத்து வரிசைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கோவிலுக்கு வெளியே நீண்ட வரிசையில் வந்து காத்திருப்பு மண்டபம் வழியே கோவிலுக்குள் வந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புதிய வீடு கட்ட வேண்டும், திருமண தடை நீங்க வேண்டும், அரசியல், ரியல் எஸ்டேட் தொழில் என பல்வேறு வேண்டுதல் நிறைவேறுவதற்காக ஆலயத்தின் பின்புறம் உள்ள வேப்பமரத்தடியில்
நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தும், செங்கற்களை அடுக்கி வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்களுக்கு குடிநீர் சாலை வசதி உள்ளிட்டவை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை எழும்பியுள்ளது. மேலும் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில் வரிசையின் இடையிலே குறுக்க வழியில் பக்தர்களை சாமி தரிசனம் செய்வதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட வாகனம் நிறுத்தமானது ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் இருசக்கர வாகனங்கள் முறையாக நிறுத்த முடியாமல் தவிப்பதாக குற்றம்
சாட்டுகின்றனர்.

இதையும் படியுங்கள் :  முதல் மின்சார காரை அறிமுகப்படுத்திய டொயோட்டா இந்தியா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

புது டிரெண்டாகும் Snake Wine - கேட்டாலே அதிர்ச்சியாக இருக்கே

0
7 mins agoshare
snake wine








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau