news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய வாய்ப்பு இல்லை
tv

Also Watch

tv

Read this

கிரிக்கெட் வீரர்களுக்கு உரிய வாய்ப்பு இல்லை

மயிலாடுதுறை

19

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
cricket 2

மயிலாடுதுறையில் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மயிலாடுதுறை கிரிக்கெட் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, தலா 15 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதேபோல், மொத்தம் 23 அணிகள் இந்த சங்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அணிகளை சேர்க்க இயலாது என மறுப்பு


இந்த நிலையில், எலைட் கிரிக்கெட் கிளப் என்ற அணியை சேர்ந்த வீரர்கள், தங்களிடம் அதிக எண்ணிக்கையிலான கிரிக்கெட் வீரர்கள் இருப்பதால் கூடுதலாக ஒரு அணியை ஒதுக்கி தர வேண்டும் என கடந்த ஒன்றரை வருடமாக சங்க நிர்வாகிகளிடம் நேரடியாகவும், தபால் மூலமாகவும் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால், மேலும் புதிய அணிகளை சேர்க்க இயலாது என சங்க நிர்வாகிகள் மறுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.


கிரிக்கெட் விளையாட விடாமல் மிரட்டல்


கிரிக்கெட் விளையாட ஆர்வமுள்ள வீரர்கள் அதிகமாக உள்ள நிலையில் ஏன் புதிய அணிகளை உருவாக்க மறுக்கிறீர்கள் என சங்க நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பிய போது வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் கிரிக்கெட்டை விளையாட விடாமல் செய்து விடுவதாக சங்கத்தினர் மிரட்டல் விடுத்ததாகவும் வீரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இன்று மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து, கிராமப்புற கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


வீரர்கள் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு


மேலும், இந்த பிரச்சினையை தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட எலைட் கிரிக்கெட் கிளப் அணியை தகுதி நீக்கம் செய்துள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ள போதிலும் புதிய அணிகளை ஒதுக்கி தராமல் முறைகேடாக செயல்பட்டு வருவதாகவும் மயிலாடுதுறை மாவட்ட கிரிக்கெட் சங்கம் மீது வீரர்கள் குற்றம்சாட்டினர். எனவே, தற்போதுள்ள கிரிக்கெட் சங்கத்தை கலைத்து புதிய கிரிக்கெட் சங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
செய்தியாளர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம்

செய்தியாளர்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு கண்டனம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னையில் விஜய் சூறாவளி பிரச்சாரம்

8
1 hr 28 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved