திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக பெண் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கணபதிபாளையம் பகுதியை சேர்ந்த மரியான்பீவி, தொல்காப்பியன், கிஷோர் மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய நான்கு பேரை பிடித்து போலீஸார் சோதனை செய்தபோது, கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.