திருநெல்வேலி மாவட்டம் மேலத்திடியூரில் எலிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக மூடப்பட்ட பிஎஸ்என் தனியார் பொறியியல் கல்லூரியை, வங்கி தேர்வுக்காக திறக்க சுகாதாரத்துறை அனுமதி அளித்துள்ளது. கல்லூரி விடுதியில் தங்கி படித்த 8 மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், சுகாதாரமில்லாத குடிநீரை பயன்படுத்தியதாக கல்லூரி மூடப்பட்டது. இந்நிலையில், நாளை நடைபெறும் வங்கி தேர்வுக்கு வெளி மாநில தேர்வர்கள் வருவதால், உடனடியாக மையத்தை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வு நடக்கும் அறைகள் மட்டும் கழிப்பறைகளை சுத்தம் செய்யவும், பாதுகாக்கப்பட்ட குடிநீரை வெளியில் இருந்து கொண்டு வந்து தேர்வர்களுக்கு வழங்கவும் கல்லூரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.