தாம்பரம் அருகே காதலி தங்கையின் நண்பரை ஸ்க்ரூ ட்ரைவரால் காதலன் குத்திய நிலையில், காதல் ஜோடி தலைமறைவானது. கடப்பேரி மெளலானா நகரில் வசித்து வரும் பிரவீன் இன்ஸ்டாகிராம் மூலமாக லாவண்யா என்பவரை காதலித்து வந்த நிலையில், அப்பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்தனர். லாவண்யா தனது பிறந்தநாளில், மது அருந்தியதோடு தங்கையுடன் தொலைபேசியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தங்கை தனது நண்பர் அரவிந்தை அழைத்துக்கொண்டு லாவண்யா வீட்டிற்கு வந்த போது கைக்கலப்பு ஏற்பட்டு, பிரவீன் ஸ்க்ரூ ட்ரைவரால் அரவிந்தை குத்தினார். அப்போது உடனிருந்த பிரவீனின் தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.