வேலூரில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை தொட்டியில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கொணவட்டம் பகுதியில் உள்ள பழைய பெங்களூரு சாலையில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்தன. இந்த நிலையில், தொட்டியின் மூடி உடைந்து கவிழ்ந்த டிப்பர் லாரியை கிரேன் மூலம் மீட்டனர்.