news-tamil-logo

3/18/2026, 11:46:52 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தவெகவினர் மீது தாக்குதல் - திடீர் ட்விஸ்ட்
tv

Also Watch

tv

Read this

தவெகவினர் மீது தாக்குதல் - திடீர் ட்விஸ்ட்

சர்வேயில் G-PAY No ஏன் கேட்கிறாங்க?

Posted on: Feb 12, 2026 08:10 AM

97

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை, பாரிமுனையில் தவெகவினர் தாக்கப்பட்டதாக முதலில் தகவல் பரவிய நிலையில், திடீர் திருப்பமாக தவெகவினர் தான் முதலில் பொதுமக்களை வீடு புகுந்து தாக்கியதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. விசில் சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லி மிரட்டியதுடன், அதற்கு சம்மதம் தெரிவிக்காதவர்களை பெண்கள், மூதாட்டி என்றும் பாராமல் கொடூரமாக தாக்கியதாக சொல்லப்படும் நிலையில், உண்மையில் பாரிமுனையில் என்ன நடந்தது? என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

தவெக தலைவர் விஜய் கண்டனம்
விசில் சின்னத்திற்கு ஓட்டு போட சொல்லி, ஈவு இரக்கமின்றி பெண்களை தவெகவினர் காலால் எட்டி உதைத்து அடித்ததாக சொல்லப்படும் சம்பவம் நடுநடுங்க வைக்கிறது.
சென்னை, பாரிமுனை அங்கப்பன் நாயக்கன் தெரு அருகே சர்வே எடுக்க சென்ற தவெக நிர்வாகிகளை திமுகவினர் கூட்டமாக சேர்ந்து கொடூரமாக தாக்கியதாக சொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 4 மாத கர்ப்பிணி பெண் நிர்வாகி உள்பட 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார்.

விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்
இந்நிலையில், திடீர் திருப்பமாக தவெகவை சேர்ந்தவர்கள் தான் முதலில் பொதுமக்களை காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதாக பகீர் புகார் எழுந்துள்ளது. அதாவது, சர்வே எடுப்பதாக கூறி ஒவ்வொரு வீடாக செல்லும் தவெக நிர்வாகிகள், தொகுதியில் என்ன பிரச்சனை? குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர்? போன்ற பொதுவான கேள்விகளை கேட்காமல், எடுத்த உடன் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும் என வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதோடு, குடும்ப தலைவியின் ஜி-பே நம்பரை சொல்ல சொல்லி கட்டாயப் படுத்தியதாகவும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மனம் பதறுகிறது
ஆனால், ஜி-பே நம்பரை கொடுக்க மறுத்ததுடன், தாங்கள் விரும்பும் கட்சிக்கு தான் வாக்களிப்போம் என வீட்டில் இருந்த பெண் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தவெக நிர்வாகிகள், அப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்து தாக்கியதாக சொல்லப்படுகிறது. உடனே பெண் நிர்வாகிகளும் சேர்ந்து அடித்ததாக கூறப்படும் நிலையில், வலி தாங்க முடியாமல் அவர் கதறிய சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, தட்டி கேட்டனர். ஆனால், அவர்களையும் விட்டு வைக்காத தவெகவினர், மூதாட்டி என்றும் பார்க்காமல் பிடித்து கீழே தள்ளி விட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை கேட்கும் போதே மனம் பதறுகிறது.

உண்மையில் என்னதான் நடந்தது?
ஆட்சி, அதிகாரம் எதுவும் இல்லாத போதே வீடு தேடி வந்து மிரட்டி ஓட்டு கேட்கும் அளவு தவெக நிர்வாகிகளுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என கொந்தளிக்கும் மக்கள், ஒருவேளை ஆட்சிக்கு வந்து விட்டால், மக்களின் நிலை என்ன ஆவது என அச்சம் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, பாரிமுனையில் உண்மையில் என்னதான் நடந்தது? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. முதலில் திமுகவினர் தாக்கியதாக தவெகவினர் புகார் கூறிய நிலையில், தற்போது தவெகவினர் தாக்கியதாக மூன்று பெண்கள் புகார் கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் இந்த குழப்பங்களை நீக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Link
இரண்டு லட்சம் வாக்கு, இபிஎஸ் சொன்னது என்ன?

இரண்டு லட்சம் வாக்கு, இபிஎஸ் சொன்னது என்ன?

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
6 hrs 59 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved