Also Watch
Read this
Posted on: Feb 22, 2026 10:30 AM
By: Fyrose Banu

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் மக்களுக்கு நல்லது செய்வது தான் முக்கியம் என திரைப்பட நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் கூறினார். மேட்டுப்பாளையத்தில் தனியார் நகைக்கடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
தமிழ் சினிமாவே மிகுந்த எதிர்பார்க்கிறது
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜஸ்வர்யா ராஜேஷ் நீண்ட வருட திரையுல கணவு நனவாகும் தமிழ் திரையுல ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் ஒரே திரைப்படத்தில் இனைந்து தோன்ற உள்ளதை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவே மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்
தமிழ் நடிகர்கள் மற்றும் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் நடிகர் விஜயை தனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அதே சமயத்தில் மக்களுக்காக யார் வந்தாலும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என பேசினார்.
இங்கு நல்ல மாப்பிள்ளை இல்லை போல...
மேலும் விஜய் பிரச்சாரத்திற்காக அழைத்தால் செய்வீர்களா என கேட்டதற்கு அதற்கு வாய்ப்பில்லை என்றார். திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜஸ்வர்யா ராஜேஷ் நல்ல முகூர்த்த நாளும் மாப்பிள்ளையும் ரெடி என்றால் திருமணத்திற்கு நானும் ரெடி, இங்கு நல்ல மாப்பிள்ளை உள்ளார்களா என கேட்ட போது திடீரென மின்சாரம் கட் ஆனதால் இங்கு நல்ல மாப்பிள்ளை இல்லை போல என நகைச்சுவையாக பேசினார். அடுத்த அப்டேட் குறித்த கேள்விக்கு தெலுங்கில் இரண்டு படங்கள் புக்காகி உள்ளதாக கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved