Also Watch
Read this
By: Fyrose Banu

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொது தரிசன வரிசையில் காத்திருந்த ஆந்திர பக்தர் திடீரென உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோயிலுக்கு வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 
திருச்செந்தூருக்கு வந்த ஆந்திர பக்தர் உயிரிழப்பு
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் நிசாம் பாத் பகுதி சேர்ந்த கோகுல் ராம்நாத் (61) குடும்பத்தினர் ஆறு பேர் நேற்று சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் தரிசன வரிசையில் காத்திருந்தபோது திடீரென கோகுல் ராம்நாத்க்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோயில் ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 

பக்தர்களிடையே பரவிய சோகம்
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கோகுல் ராம்நாத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கோயில் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர் திடீரென உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved