தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடந்த மூன்று மாதங்களாக குமாரபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே கொட்டப்பட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பைகளில் அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைத்து செல்வதால் புகை வெளியேறி மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.