சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகர் சிலம்பரசன் சுவாமி தரிசனம் செய்தார். கவரப்பட்டு வைபவ் வாண்டையார் உடன் கோவிலுக்கு சென்ற சிலம்பரசனுக்கு, கோவில் தீட்சிதர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தவருக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தரிசனம் முடித்து வெளியே வந்த சிலம்பரசனை ஆர்வமுடன் பார்த்த பொதுமக்கள், புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.