Also Watch
Read this
By: Web Team

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண் ரயில் மோதி உயிரிழந்த நிலையில், அதனை காண சென்ற நபரும் தண்டவாளத்தில் சென்ற போது பரிதாபமாக உயிரிழந்தார். அன்னக்கிளி என்ற பெண் காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளம் ஓரமாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது பின்னால் வந்த ரயில் மோதி அந்த பெண் பலியானார். இந்த சம்பவத்தை அறிந்த ராஜலிங்கம் உடலை பார்த்து விட்டு தண்டவாளத்தில் சென்ற போது அவரும் உயிரிழந்தார்.