கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே உணவை தேடி வீட்டிற்குள் செல்ல முயன்ற ஒற்றை காட்டு யானை, வாசலில் நுழைய முடியாததால் அங்கிருந்து சென்றது. வரபாளையம் பகுதியில் உள்ள கணேசன் என்பவரது தோட்டத்திற்கு வந்த ஒற்றை காட்டு யானை, உணவு தேடி தோட்டத்து வீட்டின் வாசலுக்குள் நுழைய முயன்றது. வீட்டிற்குள் நுழைய முடியாததால் அங்கிருந்து சென்ற யானை தோட்டத்தில் பயிரிடப்பட்டு இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு காட்டு யானைகளை வனப்பகுதியிலிருந்து வெளியேறாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.