news-tamil-logo

3/18/2026, 11:49:19 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மருமகனே செய்த பயங்கரம்
tv

Also Watch

tv

Read this

மருமகனே செய்த பயங்கரம்

சாலைகிராமம், சிவகங்கை

Posted on: Feb 13, 2026 10:46 AM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த முதியவர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பறிபோன உயிர். மருமகனே, மாமனாரை அடித்து கொன்றது ஏன்? நடந்தது என்ன?

பக்கத்து வீட்டிலிருந்து கேட்ட அலறல் சத்தம்
நைட் நேரம்ங்குறதால தெருவே அமைதியா இருந்துருக்கு. அப்ப பாத்து ஒரு வீட்ல இருந்து அலறல் சத்தம் பயங்கரமா கேட்டுருக்கு. ஒடனே அக்கம் பக்கத்துல உள்ளவங்க ஓடிப்போய் பாத்தா, வீட்டுக்குள்ள ஒருத்தரு உயிருக்கு போராடிட்டு இருந்துருக்காரு. விஷயம் தெரிஞ்சு உடனே ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், ரத்த வெள்ளத்துல கிடந்த மதியழகன மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. ஆனா, ஹாஸ்பிட்டலுக்கு போற வழியிலேயே மதியழகனோட உயிர் போயிருச்சு. அடுத்து, என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க போலீஸ்காரங்க விசாரணையில இறங்குனாங்க. அப்பதான், மதியழகன கொல பன்னது, வேற யாரும் இல்ல, அவரோட சொந்த மருமகன் -ங்குறது தெரியவந்துருக்கு.

குடி பழக்கத்தால் கணவன் - மனைவி இடையே தகராறு
சிவகங்கை, சாலைகிராமத்த சேர்ந்த கார்த்திக்கிற்கும் ஷாலினிக்கும் நாலு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் நடந்திருக்கு. இந்த தம்பதிக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. ஆட்டோ ஓட்டிட்டு இருந்த கார்த்தி, ஒழுங்கா வேலைக்கு போகாம, தெனமும் குடிச்சிட்டு பொறுப்பே இல்லாம இருந்துருக்காரு. இதனால கணவன் - மனைவிக்குள்ள அடிக்கடி பிரச்சினை வந்துருக்கு.

மதுபோதையில் மனைவி ஷாலினியை அடித்த கார்த்தி

ஒருநாள் வீட்டுக்கு ஃபுல் போதையில வந்திருக்காரு கார்த்தி. உங்களுக்கு எத்தனை முறை சொல்றது, நமக்கு ரெண்டு பொம்பள பிள்ளைங்க இருக்காங்குற நினப்பு உங்களுக்கு கொஞ்சமாச்சு இருக்கான்னு கேட்டு கோபப்பட்டிருக்காங்க மனைவி ஷாலினி. ஏற்கெனவே போதையில இருந்த கார்த்தி, என்னடி எப்ப பாத்தாலும் கத்திக்கிட்டே இருக்கன்னு சொல்லி, ஷாலினிய கண்டமேனிக்கு அடிச்சு துன்புறுத்திருக்காரு.

மகளின் நிலையை கண்டு ஆத்திரமடைந்த தந்தை
கார்த்திக் அடிச்ச அடியில, ஷாலினியோட முகமே வீங்கிப் போயிருந்துருக்கு. இதுக்கு மேலயும் இவன் கூட குடும்பம் நடத்த முடியாதுன்னு விரக்தியான ஷாலினி, ரெண்டு குழந்தைங்களையும் கூப்டிட்டு நேரா அவங்க பெற்றோர் வீட்டுக்கு போயிருட்டாங்க. அப்ப வீட்டுல இருந்த அவங்க அப்பா மதியழகன், என்னம்மா ஆச்சு, ஏன் இப்படி முகம் எல்லாம் ரத்தம் கட்டுன மாதிரி வீங்கிப்போய் இருக்குன்னு கேட்டுருக்காரு.

மகளுக்கு நியாயம் கேட்க சென்ற மதியழகன்
அப்ப, என் புருஷன் தெனமும் குடிச்சிட்டு வந்து என்ன அடிக்குறாரு, அவர் அடிச்சதுல தான் எனக்கு இப்படி ஆகியிருச்சு, இனிமே நான் அங்க போக மாட்டேன்னு சொல்லி கதறி அழுதுருக்காங்க ஷாலினி. இதையெல்லாம் கேட்ட தந்தைக்கு கோபம் தலைக்கு ஏறியிருக்கு. மகள முகமெல்லாம் வீங்கிப்போற அளவுக்கு அடிச்சு கொடுமைப்படுத்துனவன சும்மா விடக்கூடாதுன்னு நினச்சு, நேரா மருமகன் வீட்டுக்கு போய் நியாயம் கேட்டுருக்காரு.

கார்த்தி உட்பட 2 பேரை கைது செய்த போலீசார்
அப்போ, போதையில இருந்த கார்த்தி, மாமனாருன்னு கூட பாக்காம அவர தகாத வார்த்தைகளால பேசிருக்கான். அப்ப, ரெண்டு பேத்துக்கும் இடையில கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பா மாறிருக்கு. ஆத்திரத்தோட உச்சிக்கு போன கார்த்தி, திடீர்னு வீட்டுல இருந்த கட்டைய எடுத்து, மாமனார் மதியழகன அடிச்சிருக்காரு. அத பாத்துட்டு மகன தடுக்காம, கார்த்தியோட அப்பா ஜெயராமச்சந்திரன்னும் சேந்து மதியழகன கண்மூடித்தனமா அடிச்சே கொன்னுருக்காங்க. விசாரணையில மொத்த உண்மையும் தெரியவரவே, கார்த்தியையும், அவனோட அப்பா ஜெயராமச்சந்திரன் மேலயும் கொலை வழக்குப்பதிவு பண்ண போலீஸ் ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க.

Related Link
இளைஞருடன் இல்லீகல், கள்ளக்காதலில் மயங்கிய மனைவி

இளைஞருடன் இல்லீகல், கள்ளக்காதலில் மயங்கிய மனைவி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
7 hrs 1 min agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved