ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானை, திடீரென அவ்வழியாக வந்த காரை துரத்தியதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனப்பகுதியில் அதிகளவில் வசித்து வரும் காட்டு யானைகள், வனப்பகுதி வழியாக செல்லும் சாலையில் லாரிகளில் இருந்து விழும் கரும்புகளை தின்பதற்காக முகாமிடுவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில் கரும்புக்காக காத்திருந்த ஒற்றைக் காட்டு யானை, திடீரென அவ்வழியாக வந்த காரை துரத்தியது. சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநர் காரை லாவகமாக பின்னோக்கி இயக்கி தப்பினார்.