சென்னை செங்குன்றம் அருகே எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக ஒதுங்கிய தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கிய விபத்தில் 5 பெண்கள் காயமடைந்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து 31 பயணிகளுடன் திருவண்ணாமலை கோயிலுக்கு புறப்பட்ட பேருந்து, பம்மதுகுளம் அருகே வந்த போது விபத்தில் சிக்கியது. சாலையோரம் இருந்த பெரிய பள்ளத்தை ஓட்டுநர் கவனிக்காததால் ஏற்பட்ட விபத்தில், முன்பக்க சக்கரங்கள் முழுவதும் பள்ளத்தில் இறங்கிய நிலையில், ஏறக்குறைய செங்குத்தாக நின்ற பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.