சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பேத்தியின் கணவரான 22 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஆலச்சம்பாளையம் பகுதியில் மூதாட்டி வள்ளியம்மாள் தலையில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்த கிடந்த நிலையில், அவரின் பேத்தியின் கணவரான விக்னேஷை கைது செய்து விசாரித்ததில் உண்மை அம்பலமானது.