2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி பற்றி தொண்டர்கள் கவலை வேண்டாம் என்றும், கூட்டணி தானாக வரும் என முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி நம்பிக்கை தெரிவித்தார். வேலூரில் , அதிமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர், திமுகவை பொருத்தவரை அமைச்சர் துரைமுருகன் என் கட்சி என்று சொல்லமுடியாது எனறும், திமுக என்பது குடும்ப கட்சி என சாடினார்.