news-tamil-logo

3/14/2026, 10:09:42 PM

news-tamil-logo
more
Home district-news சதுரங்கபேட்டை, திருவள்ளூர்.. உதயநிதி துணை முதலமைச்சரானால் வரவேற்பேன்-அமைச்சர்..
tv

Also Watch

tv

Read this

சதுரங்கபேட்டை, திருவள்ளூர்.. உதயநிதி துணை முதலமைச்சரானால் வரவேற்பேன்-அமைச்சர்..

அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேட்டி

Posted on: Aug 30, 2024 09:30 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
60

ஆதிதிராவிடர் உள்ளிட்ட ஜாதிய பெயர்களில் உள்ள பள்ளிகளின் பெயர்களை அரசு
பள்ளிகள் என மாற்ற முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியின நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேட்டி


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 290 பயனாளிகளுக்கு
சுமார் 1.76 கோடி மதிப்பிலான மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன் படகு மீன்பிடி
வலை குளிரிட்டும் பெட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடி நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்

தொல்குடியினர் வேளாண்மை மேலாண்மை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு சாரா
தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள்
எதிர்கொள்ளும் தனித்துவமான வாழ்வாதார சவால்களை சமாளிக்கும் வகையில்
அவர்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

இதனிடையே பூண்டி ஒன்றியம் சதுரங்க பேட்டை பகுதியில் பழங்குடியின மக்களுக்கு
சுமார் 1.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
கலந்துகொண்டு பழங்குடியின மக்களுக்கு மீன் படகு மீன்பிடி வலை மீன்
குளிரூட்டும் பெட்டி தள்ளுவண்டி ஆடு வழங்குதல் கோழி உள்ளிட்ட நலத்திட்ட
உதவிகளை வழங்கினார்

திருவள்ளூர் ஐ ஆர் சி டி எஸ் தொண்டு நிறுவனம், தமிழ்நாடு கால்நடை மருத்துவர்
அறிவியல் பல்கலைக்கழகம், கொச்சி தேசிய மீன்வள மரபணு நிறுவனம் உள்ளிட்ட மூன்று
நிறுவனங்கள் சார்பில் சுமார் 290 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்
கயல்விழி செல்வராஜ் வழங்கினார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

தமிழகத்தில் ஆதிதிராவிடர் உள்ளிட்ட சாதிய பெயர்கள் கொண்ட பள்ளியின் பெயர்களை
அரசு பள்ளிகள் என மாற்ற வேண்டும் என்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான
ஒரு நபர் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு க
ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் ஜாதிய பெயர்கள்
அகற்றப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அரசு பள்ளிகள் என பெயரிடப்படும் என
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்
தகவல்

ஜாதிய குறியீடுகளுடன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை
மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்

இந்த நிகழ்வில் திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், உள்ளிட்ட வருவாய் துறை
அதிகாரிகள் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
6 hrs 15 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved