'விஸ்வம்பரா' படக்குழு திரிஷாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதன்படி, இப்படத்தில் திரிஷா 'அவனி' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 25 ஆண்டுகளாக தமிழ்ச் சினிமாவில் கோலோச்சி வரும் திரிஷா தற்போது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடதக்கது.